NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்

மருத்துவர் ஆக வேண்டும் எனும் நம் கனவின் கரம் பற்ற இனி நீட் தேர்வுகள் ஒரு தடையாக இருக்கப் போவதில்லை. ஆம், நீட் தேர்வில் வெற்றிப் பெற நீட்லி ஆப் (NEETly APP) உங்களுக்கு நிச்சயம் உதவும்.

NEETly APP

NEETly APP என்பது நீட் தேர்வுக்கான பயிற்சி செயலி. இந்த செயலியில் கடந்த 19 ஆண்டுகளில் (2002 - 2012) நடத்தப்பட்ட தேர்வுகளின் வினாதாள்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த செயலியில் மாதிரி நீட் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.

இந்த செயலி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் நீட் செயலியில் தேர்வு எழுதும் பிற மாணவர்களுடன் தங்கள் மதிப்பெண்களை நாம் ஒப்பிட்டு பார்த்து கொள்ள முடியும்.

இதன் மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நீட் தேர்வும் நீட்லி செயலியும்

NEETly APP நிச்சயம் NEET தேர்வுகளைத் தயாராவதற்கான சிறந்த செயலி ஆகும். தேர்வுக்கான மாதிரி வினாக்களை தருவது மட்டுமல்லாமல், அதற்கான விடையையும் விளக்கமாக தருகிறது இந்த செயலி.

தொடர் Mock Test

ஏற்கெனவே சொல்லியது போல இந்த செயலியின் சிறப்பே இதில் தொடர்ந்து நடத்தப்படும் mock test-கள் தான். வாராந்திர மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது நீட் தேர்வுக்கு மட்டுமல்லாமல் AIIMS, AIPMT தேர்வுகள் மற்றும் பிற மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்