தமிழகத்துக்கு எத்தனை இடங்கள்?

தமிழகத்தில் மொத்தம் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 16 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கல்லூரிகளும் உள்ளன. இவற்றுடன் 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. இவற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,500 MBBS இடங்களும், 213 BDS இடங்களும் இருக்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 4,350 MBBS இடங்களும், 2260 BDS இடங்களும் உள்ளன. மொத்தமாக தமிழகத்தில் MBBS படிப்புக்கு 7,850 இடங்களும், BDS படிப்புக்கு 2,473 இடங்களும் இருக்கின்றன. (புதிதாக அங்கீகரிக்கப்பட்ட 1,450 இடங்களும் சேர்த்து)

இவற்றுள் 85 சதவிகிதம் இடங்கள் தமிழகத்துக்கும், 15 சதவிகித இடங்கள் நீட் தேர்வு மூலம் தேர்வு செய்யுப்படும் மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மருத்தவ இடங்களுக்கான சேர்க்கை தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலமும் (Directorate of Medical Education), நீட் தேர்வு மூலம் தேர்வு பெறும் மாணவர்களுக்கான சேர்க்கையை Medical Counselling Committee மூலமும் நடைபெறும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்