நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

NEET தேர்வு 2022 தயாரிப்பு செயலியானது NEET தேர்வுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கான சிறந்த கற்றல் பயன்பாடாகும், மேலும் AIIMS, AIPMT தேர்வுகள் மற்றும் பிற மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் (BAMS/BSMS/BUMS/BHMS) சேர்க்கைக்கான `தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை) (National Eligibility Cum Entrance Test (UG) )' (NEET) அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency)  ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும்.

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டிருக்கும் தேசியத் தேர்வு முகமையே (National Testing Agency) நீட் தேர்வுக்குப் பொறுப்பேற்றுள்ளது.இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளில் இருக்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றிருக்கும் எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS) மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட (BAMS/BSMS/BUMS/BHMS) இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற விரும்புபவர்கள், இத்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றிடவேண்டும். இதேபோன்று, வெளிநாடுகளில் சென்று எம்.பி.பி.எஸ் (MBBS) படிக்க விரும்புபவர்களும் இத்தகுதித் தேர்வை எழுதித் தகுதிபெற்றிட வேண்டும்.

கல்வி மற்றும் வயதுத் தகுதி: நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மருத்துவக்கல்விச் சேர்க்கையின் போது 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 25 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்/உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலப் பாடத்தையும் எடுத்துப் படித்திருக்க வேண்டும் (மேலும் தகுதியுடைய சில படிப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளத் தகவல் குறிப்பேட்டைப் படிக்கலாம்). இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பப் பாடங்களில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் இ.டபிள்யூ.எஸ் பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பப் பாடங்களில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இந்த ஆண்டில் மேற்காணும் +2 அல்லது அதற்கு இணையான தேர்வின் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், https://neet.nta.nic.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இத்தளத்திலிருக்கும் தகவல் குறிப்பேட்டைத் தரவிறக்கம் செய்து, வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இணைய வழியிலான விண்ணப்பத்தில் நான்கு படிநிலைகள் (steps) இருக்கின்றன. முதல் நிலையில் மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றைக் கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இரண்டாம் நிலையில், விண்ணப்பத்தை நிரப்பி, கணினி மூலம் உருவாக்கப்படும் விண்ணப்ப எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாம் நிலையில், விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு (Passport) அளவிலான புகைப்படம், அஞ்சல் அட்டை (Post Card) அளவிலான புகைப்படம், விண்ணப்பதாரரின் கையொப்பம், இடதுகைப் பெருவிரல் ரேகை (Left Thumb Impression) மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிச் சான்றிதழ் (X Standard Passing Certificate) ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். நான்காம் நிலையில், கொடுக்கப்பட்டிருக்கும் ஏதாவதொரு வழிமுறையைப் பின்பற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திட வேண்டும். பொதுப்பிரிவினர் – ரூ.1500/- ஓ.பி.சி மற்றும் பொது - இ.டபிள்யூ.எஸ் பிரிவினர் ரூ.1400/- எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ.800/- என்று விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டையினை, தேர்வு நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக https://neet.nta.nic.in/எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த நுழைவுத் தேர்வு குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புபவர்கள் https://neet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம், அல்லது, neet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில், அல்லது, 011-40759000 எனும் எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?
தமிழகத்துக்கு எத்தனை இடங்கள்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்