நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
NEET தேர்வு 2022 தயாரிப்பு செயலியானது NEET தேர்வுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கான சிறந்த கற்றல் பயன்பாடாகும், மேலும் AIIMS, AIPMT தேர்வுகள் மற்றும் பிற மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
நீட் தேர்வுகள் நடந்த முடிந்த ஒரு மாதத்திற்குள், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேசிய தேர்வு முகமையான NTA-வே தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும். அந்த மின்னஞ்சல் வருவதற்குத் தாமதமானால் நாமே நம்முடைய தேர்வு முடிவுகளை நீட் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்ய neet.nta.nic.in என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கொடுத்து நம்முடைய தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். நீட் தேர்வு முடிவுகள் ஸ்கோர்கார்டு வடிவில் நீட் இணையதளத்தில் கிடைக்கும். அந்த ஸ்கோர்கார்டில் நம்முடைய அடிப்படைத் தகவல்களான வரிசை எண், பெயர் ஆகிய தகவல்களுடன் All India Rank, Category Rank மற்றும் நுழைவுத் தேர்வில் நாம் பெற்ற மதிப்பெண் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
தேர்வு முடிவுகளைத் தரவிறக்கம் செய்வது எப்படி?
neet.nta.nic.in என்ற நீட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
NEET-UG Results என்று ஒரு பிரிவு கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் நம்முடைய வரிசை எண், பிறந்த தேதி மற்றும் அந்தப் பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும் செக்யூரிட்டி பின் ஆகியவற்றைக் கொடுத்து உள்நுழைய வேண்டும்.
நம்முடைய தேர்வு முடிவுகள் அடுத்த பக்கத்தில் காட்டப்படும்.
தேர்வு முடிவுகள் காட்டப்பட்டிருக்கும் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய தகவல்கள் சரியானது தான எனச் சரிபார்க்க வேண்டும்.
பின்னர், நம்முடைய ஸ்கோர்கார்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு, தேர்வில் நாம் தகுதி பெற்றிருந்தால் இந்தியா முழுவதும் இருக்கும் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு இந்த ஸ்கோர்கார்டைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.