2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இத்தேர்வினை முதல் முறையான எழுதுவோரும் உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் எழுதுபவர்களும் உண்டு. முதல் முறை எழுதும் மாணவர்களுக்கு நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள், எந்தெந்த பாடத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் ஆகியவை குறித்து இன்னும் சிறு சிறு சந்தேகங்கள் இருக்கக்கூடும், இதுக்குறித்து தெளிவாக விளக்குகிறார் கல்வியாளர் ராஜராஜன்.“நீட் தேர்வை பொறுத்தவரை MCQ எனப்படும் Multiple Choice வினாக்களே தேர்வில் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு சாய்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான ஒரு பதிலுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான ஒவ்வொரு பதிலுக்கும் 1 மதிப்பெண் குறைக்கப்படும். மொத்தமாக 180 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். தேர்வின் அதிகபட்ச மதிப்பெண்கள் 720. 180 வினாக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டுமென்றாலும் வினாத்தாளில் மொத்தம் 200 வினாக்கள் இருக்கும். இந்த வழக்கம் சென்ற வருடத்தில் இருந்து தான் நடைமுறையில் உள்ளது. அதாவது முன்பு கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் பதிலளித்தாக வேண்டும். தற்போது இருபது வினாக்களுக்கு அவரவருக்கு ஏற்றவாறு விட்டுவிடலாம்.

உயிரியலை பொறுத்தவரை தாவரவியல் (Botany) மற்றும் விலங்கியல் (Zoology) ஆகிய இரண்டு பாடங்களுக்கும் தலா 50 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள். அடுத்ததாக இயற்பியலில் (Physics) 50 வினாக்கள், வேதியியலில் (Chemistry) 50 வினாக்கள் என மொத்தமாக கேட்கப்படும் கேள்விகள் 200. அதில் ஒரு மாணவர் எழுத வேண்டிய வினாக்களின் எண்ணிக்கை 180. மேலும் மேற்கூறிய ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 வினாக்களுக்கு விடையளித்திருக்க வேண்டும்.   இதில் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம். இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தியரிக்களை மட்டும் படித்தால் போதாது. Numerical Problems, Reasoning, Analysis வகை வினாக்களுக்கு அதிகம் தயாராக வேண்டும். இவை எல்லாவற்றையும் விட மிக முக்கிய ஒவ்வொரு பாடத்திலும் ஆழ்ந்த புரிதல் மாணவர்களுக்கு இருக்க வேண்டும்

நீட் தேர்வை NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை எனப்படும் அமைப்பே நடத்துகிறது. நீட் தேர்விற்கான தனியான பாட அமைப்பை NTA வெளியிடுவதுண்டு. அதனால் பல பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் எந்த குழப்பமும் அடையாமல் அவர்கள் கொடுக்கின்ற சிலபஸ் வாரியாக தேர்வுக்கு தயாரானாலே போதுமானது.இப்போது மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியடைவதற்குக் காரணம், வெறுமென Question Answer-க்களை படித்துவிட்டு மட்டும் தேர்விற்கு செல்வதுதான். இது மிகவும் தவறான ஒரு வழி. படிக்கும் பாடத்தில் ஆழ்ந்த அறிவே நல்ல பலனை தரும். மேலும் 11-ம் வகுப்பு பாடங்களுக்கு சம அளவு முக்கியத்துவத்தை மாணவர்கள் தர வேண்டியது அவசியம்” என்கிறார் ராஜராஜன்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்