NEET: Basic ideas for Preparation and Trips & Tricks to amplify Scores

மருத்துவ படிப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இன்றைய மாணவர்கள் சந்திக்கும் முதல் சவால் நீட் தேர்வு. இத்தேர்விற்காக தனியே சிறப்பு  வகுப்பைகளை நடத்தும் பள்ளிகள்,  இதெற்கென்றே இயங்கிவரும் சில தனியார் பயிற்சி மையங்கள் போன்றவை எல்லா மாணவர்களும் கிடைத்துவிடுவதில்லை. மருத்துவர் ஆகும் கனவுடன் இருக்கும் மாணவர்கள் பலருக்கும்  நீட் தேர்வு குறித்தான புரிதல் இன்னமும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் இத்தேர்விற்கு தயாராவதற்கான சில பொதுவான வழிமுறைகளை வழங்குகிறார் கல்வியாளர் ராஜராஜன்.

“நீட் தேர்விற்கான ஆரம்ப புள்ளி 11-ம் வகுப்பிலேயே தொடங்கிவிடுகிறது. ஆனால் அப்பாடங்களை பள்ளிகளும் சொல்லித்தருவதில்லை, அதனால் அதுகுறித்தான முக்கியத்துவம் மாணவர்களிடமும் இல்லாமல் போகிறது. எனவே முதலில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை மாணவர்கள் தெளிவாக படிக்க வேண்டும். பொதுத்தேர்விற்காக படிக்கும் கேள்வி பதில்களை போல அல்லாமல் ஒவ்வொறு பாடத்தையும் நுணுக்கமாக புரிந்து படிக்க வேண்டும்.

அடுத்ததாக நீட் தேர்வுக்கென்று NTA வெளியிட்டுள்ள சிலபஸை  முழுமையாக ஆராய்ந்து அதற்கேற்றவாறு படிக்க வேண்டும். இந்த பாடம் முக்கியமானது, இது தேர்வில் கேட்கப்பட வாய்ப்பில்லை என எதையும் ஒதுக்காமல் அனைத்தையும் படிப்பது அவசியம். நீட் தேர்வுக்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை தினமும் ஒதுக்கி படிக்க வேண்டும். இதுவே நீட்டிற்கு தயாராவதற்கான பொதுவான வழிகள் ” என்று கூறினார்.

இத்தேர்வில் வெற்றியடைய சில மாணவர்கள் மிக கடினமாக உழைப்பதுண்டு. மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் அனைத்தையும் அவர்கள் சரியாகவே பின்பற்றியிருப்பார்கள். இருப்பினும் தங்களுக்கு தேவையான மதிப்பெண்களை சிலரால் பெற முடிவதில்லை. இவ்விடத்தில் இத்தேர்வை அணுகுவதற்கான சில நுணுக்கங்கள் அவர்களுக்கு அவசியமாகிறது.

அதே போல நீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் AFMC எனப்படும் புனேவில் உள்ள Armed Force Medical கல்லூரியிலும் விண்ணப்பிக்கலாம். ராணுவம் நடத்தக்கூடிய அக்கல்லூரியில் படித்துவிட்டால் வேலை என்பது அங்கேயே நிச்சயம். இக்கல்லூரியும் நீட்டிற்கு கீழ் தான் வருகிறது.  முன்பு வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க எந்த தேர்வும் இல்லை. ஆனால் தற்போது அங்கு செல்வதற்கும் நீட் என்பது கட்டாயம். படித்து முடித்து இந்தியா திரும்பும் போதும் மற்றுமொரு தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்” என்கிறார் ராஜராஜன்

“ஒரு பாடத்தையும் மேம்போக்காக மட்டும் படிக்காமல் அதை Reasoning மற்றும் Assertion-க்கு உட்படுத்தி படிப்பது அவசியம். இவற்றை சரியாக மேற்கொள்ள ஒவ்வொரு பாடத்திற்கு MInd mapping செய்வது மிக உதவியாக இருக்கும். அடுத்ததாக தங்களுடைய பாடத்திட்டத்தை தாண்டி NCERT பாடத்திட்டத்தின் அனைத்து பாடங்களையும் முழுமையாக படிக்க வேண்டும். இதுதவிர மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எழுதுவது, தற்போது நுழைவு தேர்வுக்கென்றே இணையத்தில் உள்ள பல்வேறு தளங்களில் உள்ள மெட்டீரியல்களை படிப்பது ஆகிவற்றை கூடுதல் பயிற்சியாக மேற்கொள்ளலாம்” இவ்வாறு கூறினார் ராஜராஜன்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்