Neet Daily Routine

நீட் தேர்விற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அத்தேர்விற்கு தயாராகிவரும் மாணவர்கள் தினசரி கடைபிடிக்க வேண்டிய வழங்கங்களை பற்றி பேசுகிறார் கல்வியாளர் ராஜராஜன்.

“ இவ்வருடத்திற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. போட்டி தேர்வாக நம் பிள்ளைகள் நீட் தேர்வை மட்டும் எழுதுவதில்லை. அதை தவிர JEE, NATA, NEST முதலிய பல்வேறு தேர்வுகள் அவர்கள் தயாராக வேண்டியிருக்கிறது. அவை அனைத்தும்  பொதுத்தேர்விற்கு ஒட்டியே நடைபெறக்கூடியவை.

இதனால் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு சவால்கள் ஏற்படுகிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்  என்பது முதலாவது. அதில் சிலர் நீட்டிற்கு தான் பொதுத்தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படாதே என்று நினைப்பதுண்டு. அதை நான் தவறான போக்கு என்று கூறுவேன். ஏனென்றால் பொதுத்தேர்வின் மதிப்பெண் என்பது அண்ணா பல்கலைகழகத்தின் கீழுள்ள கல்லூரிகளில் சேர,  NATA தேர்வு எழுத, கலை அறிவியல் கல்லூரிகள், கால்நடை கல்லூரிகளில் சேர முதன்மையாய் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் அத்தேர்வையும் முழு கவனத்தோடு மாணவர்கள் சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எனவே அதை அவர்கள் நிராகரித்து விட முடியாது.

இது  ஒருபுறம் இருக்க நீட் தேர்வில் இத்தனை மதிப்பெண் வாங்கிவிட்டால் மருத்துவ சீட்  உறுதியாக கிடைத்து விடும் என்றும்  கூறிவிட முடியாது. அரசு மற்றும் செல்ப் ஃபைனான்ஸ் கல்லூரிகளில் உள்ள சீட்களை தவிர்த்து மீதமுள்ள தனியார் பல்கலைகழகங்கள் நிர்ணயிக்கும் தொகையை  அனைவராலும் கட்டி சேர்ந்துவிட முடியாது அல்லவா. இதனால் ஏற்படும் உறுதியின்மை நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பினும் பொதுத்தேர்விலும் நன்றாக படிக்கவேண்டிய அவசியம் உண்டாகிறது. இப்படி இரண்டு வெவ்வேறு தேர்வுகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் பிள்ளைகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. 12-ம் வகுப்பிற்கு படிப்பது போல போட்டித்தேர்விற்கு தயாராக முடியாது. சரி, போட்டி தேர்வில் கவனம் செலுத்தலாம் என்றால் பொது தேர்வினால் அவர்கள் பல வாய்ப்புகளை இழக்கக்கூடும். எனவே மாணவர்கள் இனிவரும் நாட்களில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தூங்கும் நேரம் போக காலை 5-ல் இருந்து 8 வரை ஒரு மூன்று மணி நேரம், மாலை 4-ல் இருந்து 11 வரை ஒரு 7 மணி நேரம் என மொத்தம் 10 மணி நேரம் இருக்கிறது. தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதில் இரண்டு மணி நேரத்தை ஒதுக்கி வைத்து விட்டால் மீதம் இருப்பது 8 மணி நேரத்தை இந்த இரண்டிற்காகவும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும். இரண்டிற்குமான பாடங்கள் கிட்டத்தட்ட ஒன்றாய் இருப்பினும் அந்தந்த தேர்விற்கான வெவ்வேறு முறைகளில் ஆழமாய் படிப்பது அவசியம்.

பொதுத்தேர்விற்காக ஒரு பாடத்தை படிக்கும் போது அதே பாடத்தை நீட் தேர்விற்காக படிக்கும் வகையில் திட்டமிட்டால் கூடுதல் சிறப்பு. இவை அனைத்தும் சரியாய் செய்ய அவர்கள் தங்களை மனதளவிலும் உடலளவிலும் நன்றாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்த திட்டத்தை தேர்விற்கு ஒரு 10 நாட்களுக்கு முன்பு வரை திட்டமிட்டு நிறைவு செய்தால்  அதன் பிறகு ரிவிஷன் செய்வதற்கு மிகுந்த உதவியாய் இருக்கும்” இவ்வாறு கூறினார் ராஜராஜன்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்