நீட் தேர்வை எதிர்கொள்வதில் கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகிறார்கள்.

நீட் தேர்வை எதிர்கொள்வதில் கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. சரியான திட்டமிடலும் நேர்த்தியான உழைப்பும் இருந்தால் நிச்சயம் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்கிறார் கல்வியாளர் ராஜராஜன்.

நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பாக அரசு வரையறுத்த பாடத்திட்டத்தை  படித்து பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததாலே மருத்துவ கல்லூரியில் நிச்சயம் இடம் கிடைத்துவிடும். மருத்துவ கனவு உள்ள ஒரு மாணவனின் பாதை என்பது அப்போது இதுவாகவே இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது  மாறியுள்ளது. பொதுவாக அரசு பள்ளி மாணவர்களிடையே CBSE பாடங்கள் குறித்தான அச்சம் என்பது உண்டு. தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவனுக்கு இது இன்னும் கடினமாகிறது. மேலும் நீட் தேர்விற்கு பயிற்சி பெற சில கட்டாய செலவினங்களை செய்தே ஆக வேண்டும். ஒரு குறிப்பிட்ட வழிகளை கடைபிடித்தே ஆக வேண்டும் என்ற தவறான மாயை பொதுவெளியில் ஏற்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் எந்த ஒரு கல்வியும் ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தின் கீழ் நிச்சயம் வரைமுறை செய்யப்பட்டிருக்கும். அதில் உள்ள  சில முக்கிய விஷயங்களை குறிப்பிடுகிறேன். முதலாவதாக  Application.  கொடுக்கப்பட்டுள்ள பாடத்தை மாணவர்கள் படித்துள்ளார்களா என்பதை அறிவதற்கே இந்த Application. தேர்வில் கேட்கப்படும் Question Answer வகைகள் இதன் கீழ் வரும். அடுத்ததாக Skill. மேற்கூறியவற்றை தாண்டி மாணவர்களின் கற்றலை வேறு விதமாக அறிவதே இந்த வகை. அடுத்தது IQ. படித்ததை தாண்டி பாடத்தை மாணவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பது இந்த IQ. இது தவிர Comparative studies, Reasoning போன்றவை இருக்கின்றன. இந்த அனைத்தையும் நம் பாடதிட்டத்தோடு ஒன்றிணைத்து கற்பித்தால் ஒரு மாணவன் கல்வி ஞானத்தை தானாகவே அடைவான்.   6-ம் வகுப்பில் இருந்தே நாம் இப்படியான கற்றலுக்கு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். அப்படி செய்தால் எந்த ஒரு மாணவனும் நீட் தேர்வில் மிக எளிதாக வெற்றி அடையமுடியும்.

அரசு பள்ளியில் பயிலும் ஒரு தனிப்பட்ட மாணவன் சரியான வழியில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற ஒரு நல்ல வழிகாட்டியின் துணை நிச்சயம் தேவை படுகிறது. அது தனக்கு பாடமெடுக்கும் ஆசிரியராகவும் இருக்கலாம், ஒரு கல்வியாளராகவும் இருக்கலாம்.  ஏனென்றால் வேறு மொழியில் இருக்கும் பாடத்திட்டத்தை அணுகவும், பொதுத்தேர்விலிருந்து முற்றிலும் மாறுபடும் பயிற்சி திட்ட முறைகளும் இவர்களை அவசியமாக்குகிறது. அப்போதுதான்  ஒரு மாணவன் சரியான வழியில் நீட் தேர்விற்கான படிக்க முடியும்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகே நீட் தேர்வு நடைபெற்றாலும் பதினொன்றாம் வகுப்பின் தொடக்கத்தில் இருந்தே அதற்கான பயிற்சியை தொடங்கிட வேண்டும். 12-ம் வகுப்பு பாடங்களை பொதுதேர்விற்காக நன்றாக படித்துவிடுவதால் 11-ம் வகுப்பு பாடங்களை மிக தெளிவாக படிப்பது அவசியம். வாய்ப்பு கிடைத்தால் ஆசிரியரின் உதவியுடன் CBSE பாடத்திட்டத்தின் மெட்டீரியல்கள் சிலவற்றை சேகரித்து அதையும் படிக்கலாம். பள்ளி பாடங்களைத் தாண்டி இதற்கென்று தினமும் சில மணி நேரங்கள் ஒதுக்கி காலை, மாலை படிப்பது அவசியம். நம் அரசு பள்ளி மாணவர்கள் இதை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். முக்கியமாக தனியார் பள்ளியிலோ, பயிற்சி மையங்களிலோ படிக்கும் மாணவர்களை கண்டு மனம் தளர்த்துவிடக்கூடாது. அப்படி பயிற்சி பெற்றால் தான் மருத்துவர் ஆக முடியும் என்பது ஒரு மாயை. நீட் தேர்விற்கு பின்பு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட அளவிலான அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே நம்பிக்கையுடன் உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று கூறுகிறார் ராஜராஜன் 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்