நீட் தேர்விற்கு முன் கடைசி பத்து நாட்களில் செய்யவேண்டிய  திட்டமிடல்கள், பாடங்களை ரிவிஷன் செய்யும் முறைகள் குறித்துப் பேசுகிறார் கல்வியாளர் ராஜராஜன்.

“ பாடங்கள் அனைத்தையும்  படித்து முடித்துவிட்ட பிறகுதான் மாணவர்கள் பொதுவாக Mock test என்று சொல்லப்படக்கூடிய மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சிபெறுவார்கள். அதற்கான சில வழிமுறைகளை கூறுகிறேன். மாதிரி தேர்வுகள் என்பவை பல்வேறு வினாத்தாள்களை எழுதி அதில் தவறான பதில்களை கண்டறிந்து விடுவதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. தேர்வை இவ்வளவு நேரத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்பதை மாணவர்கள் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பயிற்சி பெறுவது முதல் விஷயம். எழுதி முடித்த பிறகு மொத்த மதிப்பெண்கள் வந்தவுடன் அதில் நெகட்டிவ் மதிப்பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தவறாக விடையளிக்கபட்ட கேள்விகளுக்கான சரியான பதிலகளை மட்டும் பார்க்காமல் அவை எந்த பாடத்தில் எந்த டாபிக்கில் இடம்பெற்றவை ஆகிய அனைத்தை பற்றியும் அலசிப்பார்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் எந்த இடத்தில் சற்று தடுமாற்றம் அடைகிறார்கள் என்பதை அறிய முடியும்.

மேலும் possibility வினாக்களுக்கு விடையளிக்கும்போது சரியான விடை சரிக்கு அருகில் இருக்கும் விடை ஆகிய இரண்டையும் மாணவர்கள் குழப்பிக்கொள்வதுண்டு. நாம் நேரடியாக Reasoning வகைக்குள் இருக்கும் Q/A-ஐ அதிகம் படித்து பழக்கப்பட்டுள்ளதால் இந்த மாதிரி possibilities வினாக்களை சந்திப்பது சற்று சவாலாக இருக்கும். எனவே, பாய்ண்ட் வாரியாக விடைகளை மட்டும் படிக்காமல் ஆழமாக படிப்பது அவசியம். தமிழ் வழியில் கல்வி கற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் இதை கண்டு பயப்பட வேண்டாம். படிப்பதை தெளிவாக புரிந்து படித்தாலே போதுமானது. இந்தியாவின் தலைநகரம் எது என்று கேட்பதற்கும் அதை சற்று வேறுமாதிரி கேட்டு குழப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா. D என்னும் சரியான விடைக்கு பதில் C-யை தேர்ந்தெடுக்கும் போது,  ஏன் அப்படி யோசித்து அந்த தவறான விடையை தேர்ந்தெடுத்தோம் என்பதை ஆராய்ந்து Basics-ஐ சரி செய்ய வேண்டும். இதில் சரியான பதிலை மட்டும் பார்த்துக்கொள்வதில் எந்த பயனும் இல்லை. Physics, Chemistry, Biology ஆகிய அனைத்திற்கும் இதை செய்து பார்க்க வேண்டும். ஒருநாளின் முதல் பாதியில் பாடங்களை படித்தால், மதிய வேளையில் சில வினாத்தாள்களை ரிவைஸ் செய்துவிட்டு மாலைக்கு மேல் மேற்சொன்னவற்றை செய்து பார்ப்பது அவசியம். விளையாட்டு போட்டிகளுக்கு சில நாட்களுக்கு முன் இருந்தே வீரர்கள் அதற்காக மனதளவில் தயாராக வேண்டும். அதேபோல தான் இங்கேயும். 24 மணிநேரமும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களின் பெரும்பான்மை சிந்தனை இதை சுற்றி இருப்பது நல்லது. அதேபோல ஒரே மாதிரி எண்ணவோட்டங்கள் உடையவர்கள், ஓர் மாதிரி படித்தவர்கள் மட்டும் குழு விவாதத்தில் ஈடுபடுவது நல்லது. ஆனால் கூடுமானவரையில் அதை தவிர்த்துவிட வேண்டும் என்பதே என் கருத்து. Revision-க்கு உதவக்கூடிய பல்வேறு டூல்ஸ் இன்று இணையத்தில் உள்ளன. அதை முழுமையாக பயன்படுத்தலாம். நல்ல Reference புத்தகங்களை வைத்துக்கொள்வது நல்லது. இவை அனைத்தையும் விட மாணவர்கள் கடைசி பத்து நாட்களில் பலவற்றையும் நினைத்து  குழப்பிக்கொண்டு பயப்படுவார்கள். அது தேவையற்றது..."  என்கிற ராஜராஜன் ரிவிஷன் செய்யும் முறைகள் பற்றியும் பேசினார்.

“வினாத்தாள்கள் பலவற்றை ரிவைஸ் செய்யும்போது  சில கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்போது அக்கேள்விகளுக்கு மட்டும் முக்கியமளிக்காமல் அந்த மொத்த கான்செப்ட் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். பொதுத்தேர்வில் 12-ம் வகுப்பு பாடத்தில் இருந்து கேள்விகள் வரும். இதே நீட் தேர்வில் 11 மற்றும் 12 இரண்டில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்படும். 11-ம் பாடங்களில் அதிக கவனம் முக்கியம் கொடுக்காத  வகையில் தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். இந்த கொரோனா காலத்தில் அது இன்னும் அதிகரித்துள்ளது. ரிவிஷனின் போது அதில் கூடுதல் செலுத்தலாம். அதே போல எந்த பாடத்தை படித்தாலும் அருகில் ஒரு வெள்ளை தாளில் அனைத்திற்கும் குறிப்பு எடுத்து பார்ப்பது ரிவிஷனிற்கு மேலும் உதவும்” என்றார் ராஜராஜன்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
நீட் தேர்வு என்றால் என்ன? அதை ஏன் எழுத வேண்டும்?

NEETly ஆப் மூலம் உங்கள் கனவு வாழ்க்கையைத் தொடரவும்