இணைந்து வழங்கும்
கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று தெரிந்தவுடன் முதலில் நாம் நம்மிடையே விசாரணை நடத்திக்கொள்வது அவசியம். என்ன நடந்தது? பணப் பரிவர்த்தனை நடந்தபோது எந்த சாதனம் (Device) பயன்பாட்டில் இருந்தது? என்பதை முதலில் ஆராய வேண்டும். பிறகு, சேமிப்பு கணக்கில் பணப் பரிமாற்றத் தகவல்களை சோதனை செய்வது, உங்களின் அனைத்து சாதனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் உங்களின் சாதனங்கள் & கிரெடிட் கார்டுகளின் விவரங்கள் வேறு யாருக்கெல்லாம் தெரியும்? உங்களின் சாதனங்களை யாராவது இதற்குமுன் உபயோகித்துள்ளார்களா? என்பதனை அறிய வேண்டும். Paypal தளம் உங்களின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தது என்றால் உங்களின் பணம் திருப்பி அனுப்பப்படும் உத்தரவாதத்தை அளிக்கிறது. ஒருவேளை பணம் எடுக்கப்பட்டதற்குக் காரணம் வேறொரு இணையதள சாதனமாகவோ அல்லது பாதுகாப்பற்ற உங்களின் சமூக வலைத்தளக் கணக்கினாலோ என்றால் உங்கள் பணம் திரும்பக் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. உங்களின் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இருந்தும் Paypal தளம் அல்லது வங்கி பணத்தைத் திரும்ப அனுப்பவில்லை எனில் https://cybercrime.gov.in/ தளத்தில் உரிய ஆவணங்களின் படங்கள் / ஸ்க்ரீன்ஷாட்களைப் பதிவேற்றி புகார் அளியுங்கள். உங்கள் தந்தை வயதானவர் மற்றும் தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாதவர் என்பதால் அவருக்குத் தெரிந்த நபர்களே இதைச் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதை மறக்கவேண்டாம். பெரியவர்களின் கணக்குகளை விவரம் அறிந்த நபர்கள் கண்காணிப்பது நல்லது. கணக்கு எண், பின் நம்பர், பாஸ்வேர்டு, OTP போன்ற தகவல்களை எக்காரணம் கொண்டும் நேரிலோ, செல்போனிலோ யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்பதை வயதானவர்களுக்கு எடுத்துச் சொல்லவும். ATM கார்டு பின் நம்பரை துண்டுச் சீட்டில் எழுதி வைத்துக்கொள்வதைத் தவிர்க்கச் சொல்லுங்கள். அவர்களால் சுலபமாக நினைவில் - வைத்துக்கொள்ளக்கூடிய பின் நம்பரை செட் செய்து தரவும், அதேநேரம் எளிதாக கணிக்கக்கூடிய (உதாரணம் 1111) போன்ற பின் நம்பரைத் தவிர்க்கவும்.
உங்களுடைய வங்கிக் கணக்குத் தகவல்கள்யாவும் உங்களைத் தவிர வேறு யாருக்கும் தேவைப்படாது. வங்கியில் இருந்து அப்படிக் கேட்டாலும் நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரித்து விட்டு தகவல்களைக் கொடுக்கலாம்.
முதலில் உங்கள் வங்கியில் இது பற்றி புகார் அளிக்க வேண்டும். பின்னர் அவர்களின் வழிகாட்டுதலின் படி காவல்நிலைத்திலும் புகார் அளிக்க வேண்டும்.
கண்டிப்பாக. நம்பத் தகாத மின்னஞ்சல்கள், செயலிகள் மற்றும் இணையதளங்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்களது மொபைல் அல்லது கணினியில் வைரஸ் தாக்கி உங்கள் வங்கிக் கணக்குத் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் அதிகம்.
உங்களின் செல்போன் பல்வேறு காரணங்களுக்காக ட்ராக்/ஹேக் செய்யப்படலாம். உளவாளிகள் வணிக தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ள, மனைவி கணவனைக் கண்காணிக்க அல்லது பணக்காரராக இருந்தால், அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள செல்போன் ட்ராக் செய்யப்படலாம். செல்போன் ட்ராக் செய்யப்படுகிறதா என்பதனைக் கண்டறிய சில வழிகள்: * நமக்குத் தெரியாமலே வழக்கத்திற்கு அதிகமாக மொபைலில் இன்டர்நெட் டேட்டா செலவாவது * Standby mode அல்லது lock mode-ல் செல்போன் பயன்பாட்டிற்கான அறிகுறிகள் * எதிர்பாராத நேரத்தில் ஸ்விட்ச் ஆப் அல்லது ரீபூட் ஆவது * அழைப்புகளின்போது தேவையில்லாத ஒலி கேட்பது * விசித்திரமான மெஸேஜ்கள் * அடிக்கடி பேட்டரி குறைந்துபோதல் * பயன்பாடற்ற நிலையில் பேட்டரியின் வெப்பநிலை அதிகரித்தல் * அனிச்சையாக Bluetooth ஆன் ஆவது * நீங்கள் இன்ஸ்டால் செய்யாத ஆப் உங்கள் போனில் காணப்படுவது * ஆன்டி வைரஸ் ஆஃப் அல்லது அன்இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது * ஷட் டவுன் நேரம் அதிகரித்தல் அல்லது ஷட் டவுன் செய்வதில் சிக்கல் * போன் திடீரென மெதுவாக செயல்படுவது. இந்தக் காரணங்களை வைத்து உங்களின் செல்போன் கண்காணிக்கப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம். இலவச வைஃபை பயன்பாடு, பேட்டர்ன்/பாஸ்வேர்டு இல்லாமல் அல்லது லாக் செய்யாமல் போனை விட்டுச் செல்வது, தெரியாத USB போர்ட்களில் சார்ஜ் போடுவது, பாஸ்வேர்டுகளை போனில் ஸ்டோர் செய்து வைத்திருப்பது, இவற்றைத் தவிர்க்கவும். சந்தேகத்துக்குரிய SMS, இ-மெயில் மற்றும் இதர கணக்குகளில் உள்ள லிங்குகளைக் க்ளிக் செய்வதை அறவே தவிர்க்கவும்.
இன்றைய உலகில், நம் போன் நம்பரை மற்றொருவர் அறிந்துகொள்வது மிகச் சுலபம். ஆன்லைன் தளங்கள், பொருளாதார/டிரேடிங் அறிவுரை வழங்கும் நிறுவனங்கள், மொபைல் ஆப்ஸ், நீங்கள் சமீபத்தில் சென்ற எக்ஸ்போ என ஏதாவது ஓரிடத்திலிருந்து உங்கள் எண் பிறர் கைக்குச் சென்றுவிடும். உங்கள் டிரேடிங் நிறுவனமே உங்கள் தகவல்களை வெளியிட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கும் பல சேவைகள்/சலுகைகளுக்கு நாம் கொடுக்கும் விலை நம் சுய விவரங்கள். இப்படிச் சேகரிக்கப்படும் தகவல்களை வாங்கி விற்கும் இடைத்தரகர்களும் நிறைய பேர் உள்ளனர். தேவையற்ற டிரேடிங்/பிசினஸ் கால்களை வேண்டப்படாத அழைப்புகள் (Unsolicited calls) எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் TRAI நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இவற்றைத் தவிர்க்க 1909 எனும் இலவச எண்ணை அழைத்து DND (Do Not Disturb) சேவையைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்துகிறது TRAI. மேலும் விவரங்களுக்கு: http://www.nccptrai.gov.in/nccpregistry/. DND 2.0 எனும் மொபைல் ஆப் மூலமும் உங்களுக்கு வரும் தேவையற்ற (Spam) அழைப்புகள் & SMS-களைத் தவிர்க்கலாம். Caller Identification எனப்படும் அழைப்பவர்களின் விவரங்களைக் காட்டும் சில நம்பகமான மொபைல் ஆப்களை டவுன்லோடு செய்து பயன்படுத்துவதும் பயனளிக்கும். DND வசதி & Caller Identification ஆப்ஸ் இருந்தாலும், நம் போன் நம்பர்/இ.மெயில் ஐடி போன்ற தகவல்களை, எந்த இடத்திலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பின்னர் வழங்குவதே நல்லது!
ஒரு ஆப்பை மொபைலில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போதே தகலவல்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். பலர் அதைப் படித்துப்பார்க்காமல் "Allow" என்பதைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தவறு. எடுத்துக்காட்டாக, மொபைலில் இருக்கும் மேப்ஸ் (Maps) ஆப் செயல்படுவதற்கு Location என்ற பர்மிஷன் மட்டுமே போதுமானது, அதற்கு Contact என்பதோ, Telephone என்பதோ தேவையில்லாத ஒன்றுதான். இதுபோல வாட்ஸ்அப் போன்ற ஆப்களுக்கு Contact-டை அணுகக்கூடிய பர்மிஷன் நிச்சயம் தேவைப்படும். ஸ்மார்ட்போன்களில் Location, Contacts, camera, storage, மற்றும் microphone போன்றவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு ஆப்பிற்கு Contacts-ஐ அணுக பர்மிஷன் தரப்படும்போது அந்த ஆப் மொபைலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தொடர்பு எண்களை அதனால் ஆராய முடியும். microphone என்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால் மைக்கின் மூலமாக மொபைலைச் சுற்றிக் கேட்கும் ஒலிகளைப் பதிவு செய்ய முடியும். storage-க்கு கொடுக்கப்பட்டால் மொபைலில் பதிவுசெய்து வைத்திருக்கும் புகைப்படம், வீடியோ என அனைத்துத் தகவல்களையும் அந்த ஆப் அணுக முடியும். எனவே, ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும்போது அந்த ஆப் எதற்காக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதுமானது. சில பர்மிஷன்களைத் தராமல் போனால் ஆப்பின் செயல்பாட்டில் சிரமம் இருக்கலாம். எனவே, அதற்குத் தேவைப்படும் அடிப்படையான பர்மிஷன் அனுமதிக்கப்பட வேண்டும். அதேவேளை, தேவையற்ற விஷயங்களை அணுக ஒரு ஆப் பர்மிஷன் கேட்கிறது என்றால், உஷாராக இருக்க வேண்டியது அவசியம்!
கேள்விப்பட்டிறாத, அறிமுகமில்லாத ஆன்லைன் ஷாப்பிங் தளங்களையும், ஆசைகாட்டும் விளம்பரங்களையும் தவிர்க்கவும். ஒரு வெப்சைட்டில் இருக்கும்போது அங்கிருந்து இன்னொரு வெப்சைட்டுக்குச் செல்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை நிச்சயம் தவிர்க்கவும். எந்த வெப்சைட்டுக்குச் செல்ல நினைக்கிறீர்களோ, அந்த வெப்சைட்டின் URL-ஐ பிரவுசரில் டைப் செய்து செல்வது நல்லது. உங்களை ஏமாற்றிய நிறுவனத்தைப் பற்றி https://cybercrime.gov.in/ தளத்தில் புகார் செய்யலாம். புகாரின்போது ஆதாரமாக டெபிட் கார்டு ரசீது, பணப் பரிவர்த்தனை விவரம், ஆர்டர் இ-மெயில் ஸ்க்ரீன்-ஷாட் போன்றவற்றை வழங்கவும்.
அவரை ரிப்போர்ட் செய்துவிட்டு, சைபர் குற்றங்களைப் பற்றிய அரசின் இணையதளத்தில் புகார் அளிக்கலாம். இணையதள முகவரி: https://cybercrime.gov.in/
சைபர் புள்ளியிங் சம்பந்தமான புகார்களை https://cybercrime.gov.in/ என்ற அரசின் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
Sec 66C - அடையாளத் திருட்டு, Sec 66E - தனியுரிமையை மீறுதல் , Sec 66D - தொழில்நுட்பங்களைக் கொண்டு ஏமாற்ற முற்படுதல், Sec 72 - தொழில்நுட்பத் தகவல் திருட்டு, Sec. 503 IPC - மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தல்.
முதலில் அவரை நீங்கள் ப்ளாக் செய்யலாம். ப்ளாக் செய்த பிறகு அவரால் உங்களை தொடர்பு கொள்ள முடியாது. இப்படியான பிரச்னை பிறருக்கும் வராமல் இருக்க அவரை குறிப்பிட்ட சமூக ஊடக நிர்வாகத்திடம் ரிப்போர்ட் செய்யலாம்.