விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ!
வீட்டிலிருந்தபடியே, கல்லூரிகள் மற்றும் மேற்படிப்புகள் குறித்த அனைத்து தகவல்களும் உங்கள் கைகளில்!
இதுவோ கல்லூரி தேடும் காலம்! கல்லூரிச் சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்கள் நேரடியாக கல்வி மையங்களை அணுக முடியாத இந்நேரத்தில், கல்லூரிப் படிப்பு குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் உங்கள் இடம்தேடி கொண்டுவருகிறது விகடனின் 'மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ'.
எக்ஸ்போவின் முக்கிய அம்சங்கள்:
மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து தகவல்களும் வெபினார் வடிவில்!
மேற்படிப்பு குறித்த தெளிவுபெற நிபுணர்களிடம் கலந்துரையாடலாம்!
கல்லூரியில் இடத்தை முன்பதிவு செய்யலாம்!
டிஜிட்டல் தலைமுறைக்கு ஏற்ற டிஜிட்டல் கவுன்சிலிங்!
மாணவர்களின் எதிர்காலக் கனவை நிறைவேற்றும் மாற்றுப்பாதை... விகடனின் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ.
சிறப்பு பேச்சாளர்கள்:
Dr. சி.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்
டி.ஜி.பி, ரயில்வே & இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.
B.சுப்பாராமன்
துணைத் தலைவர் மற்றும் மதுரை மையத் தலைவர், எச்.சி.எல்., நிறுவனம்.
டி.நெடுஞ்செழியன், கல்வி ஆலோசகர்
நிறுவனர், டெக்னோகார்ட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைன்டர்.
டாக்டர். சங்கர சரவணன், கல்வியாளர்
துணை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழகம்.
K.காசிராஜன்
இணை பேராசிரியர், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்.
முனைவர் L.அருணாச்சலம்
தலைவர், பயிற்சி & வேலைவாய்ப்பு, சாய்ராம் இன்ஸ்டிட்யூஷன்ஸ்.
எம். ரமேஷ் பிரபா கல்வி ஆலோசகர்
தலைவர், கேலக்ஸி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்.
முனைவர் D.வாசுதேவன்., B.E.,M.E.,P.hD.,
முதல்வர், பிஸ்என்ஏ பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, திண்டுக்கல்.
டாக்டர் சங்கர் வேணுகோபால்
துணைத் தலைவர்- டெக்னாலஜி இன்னோவேஷன் பிரிவு, மஹிந்திரா & மஹிந்திரா
Dr. ஆர்.ராஜராஜன், கல்வி ஆலோசகர்
இயக்குநர், ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி.
M.தவமணி கிறிஸ்டோபர்., M.Sc, M.Phil, Ph.D (Interdisciplinary)., Ph.D (Maths)
முதல்வர் மற்றும் செயலர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை.
டாக்டர் E.N.கணேஷ்
டீன், ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ் ஸ்டெடீஸ், பல்லாவரம், சென்னை.
பட்டிமன்றம் எஸ்.ராஜா
ஓய்வு, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா
வருமானம் + கல்வி
அதுதான் ஹெச்.சி.எல் டெக் பீ (HCL TechBee)!
19 வயதிலேயே வேலை வாய்ப்பு
வேலை பார்த்துக்கொண்டே உயர் படிப்பு
ஹெச்.சி.எல்-ன் வித்தியாசமான முயற்சி!
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையச்செய்கிறது ஹெச்.சி.எல் டெக் பீ. +2 விற்கு பின், மாணவர்களுக்கு ஆரம்பகட்டமாக, சாஃப்ட்வேர் டெவலப்பர் (Software Developer) /அனலிஸ்ட் (Analyst) / கேட் இன்ஜினியர் (CAD Engineer) ஆகிய பிரிவுகளில் 12 மாதங்கள் பயிற்சி அளித்து, பயிற்சி பெற்ற மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கிறது ஹெச். சி. எல். வேலையில் இருக்கும்போதே, பிட்ஸ், பிலானி அல்லது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழத்தில் உயர் படிப்பு பயிலும் வாய்ப்பினையும் வழங்குகிறது ஹெச். சி. எல் டெக் பீ! மாணவர்களின் உயர் படிப்புக்கான கட்டணத்தை ஹெச். சி. எல். ஏற்றுக்கொள்வது* குறிப்பிடத்தக்கது. இதனால் சம்பளம் பெற்றுக்கொண்டே மாணவர்களால் உயர் கல்வியைப் பெற முடிகிறது!
HCL TechBee Information Centers, SPA IT Towers, Survey No. 155/1 and 155/2, 120 Feet Road, Opp. Mattuthavani Bus Stand, Madurai – 625020.
140 வருட பாரம்பர்யம்!
தி அமெரிக்கன் காலேஜ்
புகழ்பெற்ற அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி
ஏழை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம்
மாணவர்கள் விரும்பும் சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்
1881ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் புகழ் பெற்ற கல்லூரி 'தி அமெரிக்கன் காலேஜ்', மதுரை. அறிவியல், கணினி அறிவியல், மொழி & இலக்கியம், நுண்கலைகள், வாழ்க்கைத் திறன்கள், உயிரியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் உள்ளடக்கிய பட்டப்படிப்புகள் மற்றும் MPhil தமிழ், MPhil இயற்பியல் போன்ற முதுகலை பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. பயன்பாட்டு அறிவியல் துறை & SCILET (ஆங்கிலம் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வு மையம்) இங்குள்ளது. ஏழை மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி, பாடத்திட்டத்தினை மாணவர்களே தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் (CBCS), வேலைவாய்ப்புக் கூடம், வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கேம்பஸ் இன்டெர்வியூக்கள், அனைத்துவிதமான விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம்... இவையனைத்தும் அமெரிக்கன் காலேஜின் பலங்கள்!
- AIDED
- Undergraduate Programmes
- Postgraduate Programmes
- M.Phil. Programme
- SELF-FINANCED
- Undergraduate Programmes
- Postgraduate Programmes
- M.Phil. Programmes
- Ph.D. Programmes
- Satellite Campus Courses Offered
- B.Voc. Degree Programmes
The American College, Tallakkulam, Madurai – 625002.
பொறியியலில் ஒரு மைல்கல்!
பிஎஸ்என்ஏ இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
முன்னணி MNC நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மையங்கள் தொடக்கம்.
விசேஷமான மதிப்பு கூட்டும் பாடப்பிரிவுகள் & சான்றிதழ் வழங்கு பாடப்பிரிவுகள்.
விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை.
உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்வியை வழங்க திண்டுக்கலில் 1984 ஆம் ஆண்டு கல்வித்தந்தை ஸ்ரீ.ஆர். எஸ். கோதண்டராமன் அவர்களால் பிஎஸ்என்ஏ இன்ஜினியரிங் & தொழில்நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், பயோ மெடிக்கல் உள்ளிட்ட இளநிலை மற்றும் முதுநிலை இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை இக்கல்லூரி வழங்கிவருகிறது. NAAC ஆல் 'A' கிரேட் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்என்ஏ, MBA மற்றும் MCA அடங்கிய இளநிலை & முதுநிலை பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. * முன்னணி எம்.என்.சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மையங்களை நிறுவியுள்ளது. * 6511 மாணவர்கள், 431 ஆசிரிய உறுப்பினர்களுடன் 131 பி.எச்.டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 365 துணைப் பணியாளர்கள் இங்குள்ளனர். * மதிப்பு கூட்டும் பாடப்பிரிவுகளும் சான்றிதழ் வழங்கு(Certification Courses) பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகின்றன. * தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கூடம், தொடர் கல்விக் கூடம், வேலை வாய்ப்புக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய மனித வள & மேம்பாட்டுக் கூடம் (HRDC) மற்றும் மாணவர்களுக்கான தொழில் நிறுவன தொடர்பு அமைப்பினைப் பெற்றுள்ள முன்னணி கல்வி நிறுவனம். * விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை. * ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி வகுப்புகள்.
- Under Graduate Degree:
- Post Graduate Degree :
PSNA College of Engineering and Technology, Kothandaraman nagar, Dindigul-624622.
உலகத்தரத்தில் கல்வி வழங்கும்
ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ்
சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு!
சிறந்த பல்கலைக்கழகத்துக்கான பல விருதுகளை பெற்ற கல்வி நிறுவனம்
மாணவர்களின் கல்வி மற்றும் பன்முகத் திறன்களுக்கான திறவுகோல்!
1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹிந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரி இன்று நிகர்நிலை பல்கலைக்கழகம் எனும் அந்தஸ்தைப் பெற்று இயங்கிவருகிறது. ஏரோநாட்டிக்கல், ஆர்க்கிடெக்சர், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை இன்ஜினியரிங் பட்டப் படிப்புகளை வழங்குகிறது ஹிந்துஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இன்ஜினியரிங் மட்டுமின்றி பல பாடப்பிரிவுகளில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சட்டம், மேலாண்மை மற்றும் ஹெல்த் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்புகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது. புகைப்படக்கலை, சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் டிப்ளமோ கோர்ஸ்களும் இங்கு வழங்கப்படுகின்றன. பாடத்திட்டங்கள் மட்டுமின்றி மாணவர்களுக்கு உதவும் விதமாக சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் பலதரப்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், கல்விச் சுற்றுலா, இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் மற்றும் புராஜெக்டுகளில் ஈடுபடும் வாய்ப்புகள், உலகம் எங்கிலும் உள்ள 90 முதன்மை பல்கலைக்கழகங்களுடன் ஸ்டூடன்ட் எக்ஸ்சேஞ்ச் புரோக்ராம் ஆகியவற்றை ஏற்பாடு செய்கிறது ஹிந்துஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். மாணவர்களின் சிறந்த வணிக நோக்கம் மற்றும் யோசனைகளை ஊக்குவிக்கும் விதமாக இன்கியூபேஷன் சென்டர் (incubation centre) மற்றும் ஆன்ட்ரப்ரூனர்ஷிப் செல் (entrepreneurship cell) ஆகிய ஏற்பாடுகளைச் செய்துள்ளது ஹிந்துஸ்தான்!
- UG
- PG
- DIPLOMA
HITS, No.1, Rajiv Gandhi Salai (OMR), Padur, (Via) Kelambakkam, Chennai - 603 103.
வேலைவாய்ப்பில் முன்னணி; பல பிரிவுகளில் உதவித்தொகை!
வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்!
பணியமர்த்தல் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பயிற்சி.
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை
10 ஆராய்ச்சி மையங்களை செயல்படுத்திவரும் கல்வி ஸ்தாபனம்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வரும் 'வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி நிறுவனம்', தென்னிந்தியாவின் முன்னணி நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் ஒன்றாக திகழ்கிறது. யுஜிசி-யால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளை தகுதியான, அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கிறது வேல்ஸ். சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், B.E, B.Tech உள்ளடக்கிய இன்ஜினியரிங் படிப்புகள்; B.A & B.Sc. கலை மற்றும் அறிவியல் படிப்புகள்; மருந்தியல், சட்டம், BBA, BPT உள்ளிட்ட இளநிலைப் பாடத்திட்டங்கள் மற்றும் MBA, MSC, M.Tech போன்ற முதுநிலை பாடப்பிரிவுகளை வேல்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. மாணவர்களுக்கு உதவித்தொகை, ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டுக் களங்கள், ஜிம் போன்ற வசதிகளும் இங்குண்டு! ஆயிரத்திற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை ஆய்வறிஞர்களாக வளர்த்தெடுத்து வருகிறது வேல்ஸ்... கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதில் முன்னணி வகிக்கிறது வேல்ஸ்!
- Undergraduate
- Postgraduate Courses
- Research activities
Vels Institute of Science, Technology & Advanced Studies (VISTAS), Velan Nagar, P.V. Vaithiyalingam Road, Pallavaram, Chennai - 600 117.
ABET சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்தியக் கல்வி நிறுவனம்!
பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
180+ பட்டப் படிப்புகள்
2300+ தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
51000+ உலகம் முழுவதும் பணிபுரியும் மாணவர்கள்!
37 வருடங்களாக தரமான உயர் கல்வியை வழங்குவதில் முன்னிலை வகித்துவரும் பாரத் இன்ஸ்டிடியூட், 'நிகர்நிலைப் பல்கலைக்கழகம்' எனும் அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனமாகும். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் NIRF தரவரிசைப்படி தேசிய அளவில், பாரத் 36வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பி.டெக் & எம். டெக், பி.ஆர்க் & எம். ஆர்க், எம்.பி.ஏ & எம்.சி.ஏ, கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள், பி.எஸ்சி அக்ரி மற்றும் சட்டப் படிப்புகளை வழங்குகிறது பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரத், எம்.எஸ். மற்றும் பி.எச்டி வாய்ப்புகளையும் வழங்குகிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு, வேலைவாய்ப்பை அதிகரிக்க பலதரப்பட்ட பயிற்சிகள், உலகத்தரம் வாய்ந்த லேப் மற்றும் பயிற்சிப் பட்டறைகளுக்கு பெயர் பெற்ற பாரத் இன்ஸ்டிட்யூட், இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது!
- B.Sc. - Duration 4 Years
- B.Tech. - Duration 4 Years
- Arts & Science
- Integrated Courses
- M.Tech. - Duration 2 Years
- B.Arch. - Duration 5 Years
- Postgraduate Programme
- Pharmacy
- Research Programmes
Bharath Institute of Higher Education and Research, No.173, Agaram Main Rd, Selaiyur, Chennai, Tamil Nadu 600073.
உயர்வான வாழ்வுக்கு உயர்கல்வி!
மாணவர்களின் திறன் மற்றும் ஆளுமையை மேம்படுத்தும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி
முன்னணி இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
ஏழை மற்றும் தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
உலகளாவிய தொழில்நுட்பத் தரங்களுக்கு ஏற்ப தொழில் சார்ந்த கல்விச்சூழல்
25,000 மேற்பட்ட மாணவர்கள், 2000 ஆசிரிய உறுப்பினர்கள், 20+ கல்வி நிலையங்கள் என இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக கல்விசார் பணிகளில் ஈடுபட்டுவருகிறது ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி! 1995ம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ சாய்ராம் கல்லூரி, தற்போது நான்கு மாநிலங்களில் விரிந்து, நாட்டின் மதிக்கத்தக்க கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ சாய்ராம் கல்லூரி, சிவில், கம்ப்யூட்டர் சைன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற இளநிலை இனிஜினியரிங் பாடப்பிரிவுகளையும், M.E, M.Tech போன்ற முதுநிலைப் பாடப்பிரிவுகளையும் வழங்குகிறது. இவை தவிர மருத்துவம், மேலாண்மை மற்றும் பாலிடெக்னிக் பாடங்களையும் வழங்கிவருகிறது. மெரிட் ஸ்காலர்ஷிப், விளையாட்டு வசதிகள், மாநில அளவிலான சிம்போஸியம், மாணவர் விடுதி போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் மூலம் மாணவர்களுக்கு பயனளிக்கிறது ஸ்ரீ சாய்ராம் கல்லூரி. பல்கலைக்கழகத் தரவரிசையில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஸ்ரீ சாய்ராம் கல்லூரி 'A' கிரேடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பயின்ற 14000 மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பட்டப்படிப்பு முடித்து, உலகளவில் சிறந்து விளங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றில் பணிபுரிந்து வருகின்றனர்.
-
Courses Offered
Sairam Campus, Sai Leo Nagar, Tambaram West, Chennai- 600044, Tamil Nadu. Administrative Office: "SaiBhavan", 31B, Madley Road, T.Nagar, Chennai - 17.