அரசுப்பணி கனவோடு இரவு, பகல் பாராமல் படித்துவரும் உங்களுக்கு விகடனின் மனமார்ந்த வாழ்த்துகள். ஜூன் 9-ம் தேதி TNPSC Group 4 தேர்வு நடக்கவுள்ளது. 6,244 பேரைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் இந்தத் தேர்வை பல லட்சம் பேர் எழுதவுள்ளார்கள். இந்தக் கடும் போட்டிக்கு மத்தியில் நம்பிக்கையோடு உழைத்துவரும் உங்களுக்குக் கைகொடுக்க கைகொடுக்க விகடன் எடுத்திருக்கும் முன்முயற்சி இந்த மாதிரித் தேர்வு. மே 1-ம் தேதி தொடங்கி, ஜூன் 8-ம் தேதி வரை 39 நாள்களுக்கு இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். உங்கள் அரசுப்பணி லட்சியத்துக்கு இந்த மாதிரித் தேர்வு நிச்சயம் துணையாக இருக்கும் என்று நம்புகிறோம். கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து Register செய்த பின்பு மாதிரி தேர்வை தொடங்குங்கள். 6,244 பேரில் நீங்களும் ஒருவராகத் தேர்வுபெற்று அரசுப்பணியில் அமர விகடன் உங்களை மீண்டும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறது!
1. இந்த மாதிரித் தேர்வுக்காக கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. மேலே உள்ள படிவத்தில் உங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் கொடுத்து பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
2. நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மூலமாக தினந்தோறும் Login செய்து மாதிரி தேர்வுகளில் பங்கேற்கலாம்.
3. தினமும் 100 கேள்விகளுக்கு இந்த மாதிரித் தேர்வு நடத்தப்படும். இவற்றிற்கு 90 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும்.
4. தினந்தோறும் காலை 9 மணிக்கு அன்றைய தினத்திற்கான கேள்விகள் வெளியாகும். மொபைல் எண் மூலமாக Login செய்ததும் நேரடியாக கேள்விகளுக்குச் செல்வீர்கள்.
5. மொத்த மதிப்பெண்கள் 150. ஒரு சரியான விடைக்கு 1.5 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை.
6. ஒரு கேள்விக்கு ஒருமுறை மட்டுமே விடையை தேர்வு செய்ய முடியும். விடையைத் தேர்வு செய்து முடித்தபிறகு அடுத்த கேள்வி திரையில் தானாகவே தோன்றும்.
7. இப்படி 100 கேள்விகளுக்கும் விடையைத் தேர்வு செய்தபிறகு, நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண் திரையில் தோன்றும். கூடவே, நீங்கள் சரியாக விடையளித்த கேள்வியின் எண் பச்சை நிறத்திலும் தவறாக விடையளித்த கேள்வியின் எண் சிவப்பு நிறத்திலும் தோன்றும். சிவப்பு நிறத்தில் இருக்கும் எண்ணை க்ளிக் செய்தால், அந்தக் கேள்விக்குச் செல்வீர்கள். அங்கு அதற்கு சரியான விடை பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டப்படும்.
8. ஒருவேளை தவறவிட்ட முந்தைய நாள் தேர்வுகளில் பங்கேற்க வேண்டுமெனில், முதலில் அந்த நாளுக்கான தேர்வை முடிக்கவேண்டும். அதன்பிறகே முந்தைய தேர்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு, தேர்வின் இறுதியில் மதிப்பெண் பகுதிக்கு கீழே காட்டப்படும்.
9. தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு webmaster@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் மொபைல் எண்ணை குறிப்பிட்டு தொடர்புகொள்ளுங்கள். விகடனிலிருந்து உங்களை தொடர்புகொள்வார்கள்.
இலவசமாக ஒரு லட்சம் வினா விடைகள் பாடக்குறிப்புகள் மற்றும் வகுப்புகளுக்கு இங்கு காணும் NATRAJ TNPSC ACADEMY Mobile App லிங்க்கினை கிளிக் செய்யவும்.
Install App now