அன்பு வாசகர்களே… மொபைல் போனைப் பயன்படுத்தி உங்கள் புகைப்படத் திறமையைக் காட்ட வேண்டிய நேரம் இது. உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சத்யா மற்றும் விகடன் இணைந்து நடத்தும் புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ளுங்கள். அட்டகாசமான மொபைல் போன் வெல்லும் வாய்ப்பைப் பெற்றிடுங்கள்.
உங்கள் ஊரிலோ, பயணம் செய்யும் இடத்திலோ நீங்கள் பார்த்த, ரசித்த, மனம் கவர்ந்த கணத்தை வித்தியாசமான கோணத்தில் உங்கள் மொபைல் போன் கேமரா மூலம் போட்டோவாக எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள்.
போட்டியில் வெற்றிபெறும் முதல் 10 வெற்றியாளர்களுக்கு சத்யா வழங்கும் 10 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும். மேலும் வெற்றிபெற்ற புகைப்படங்கள் விகடன் பக்கத்தில் வெளியிடப்படும்.
1) புகைப்படத்தை கண்டிப்பாக மொபைல் போனில் மட்டுமே எடுத்திருக்க வேண்டும்.
2) ஒரு படம் அதிகபட்சம் 1 MB என்ற அளவில் மட்டுமே இருக்கவேண்டும். ஒருவர் ஒருமுறை அதிகபட்சமாக 5 புகைப்படங்கள் வரை மட்டுமே பதிவேற்ற இயலும்.
3) நீங்கள் அனுப்பும் புகைப்படத்தில், படம் எடுக்கப்பட்ட தேதியும், (Time Stamp on Photo) மொபைல் போன் பெயரும் (Device watermark) குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
4) உங்கள் படங்கள் குறித்த கூடுதல் விவரங்களையும் (எடுக்கப்பட்ட இடம், பிற சிறப்புகள், etc) கீழே படிவத்தில் குறிப்பிடவும்.
5) PNG, JPG, JPEG Format படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். எனவே பிற Format-களை Upload செய்யவேண்டாம்.
6) நீங்கள் அனுப்பும் புகைப்படத்திற்கான பயன்பாட்டு உரிமைகள் அனைத்தும் விகடனுக்குரியது.
7) புகைப்படம் உங்களுடையது இல்லை என கருதும்பட்சத்தில் உங்கள் பங்கேற்பு தகுதியிழப்பு செய்யப்படும்.
8) நடுவர் தீர்ப்பே இறுதியானது.
9) புகைப்படங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 28, 2024
10) போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு: webmaster@vikatan.com
தங்கள் படங்களைப் பதிவேற்றியமைக்கு நன்றி. விரைவில் முடிவுகள் விகடன் தளத்தில் வெளியாகும்.
நன்றி!
படிப்பு, வழக்கறிஞர். போட்டோகிராஃபி மீது தீராக்காதல். மாணவர் பத்திரிகையாளராக தன் கல்லூரி காலத்தில் விகடன் குழுமத்திற்குள் புகைப்படக் கலைஞராக அடியெடுத்து வைத்தவர் ராஜசேகரன். புகைப்படத்துறையில் 25 வருட அனுபவம். தமிழகத்தின் முன்னணி சினிமா, அரசியல், பிசினஸ் பிரமுகர்கள் அனைவருக்கும் இவர் எடுக்கும் புகைப்படமென்றால் பிரியம். தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின்போது இவர் எடுத்த புகைப்படங்கள் வரலாற்றின் ஆவணங்கள். ``இவர் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கதை சொல்லும்" என்பது விகடன் வாசகர்கள் இவர்களுக்கு அளிக்கும் பாராட்டு. தொடக்க கால ஃப்லிம் கேமராக்கள் தொடங்கி சமீபத்தில் வெளியான லேட்டஸ்ட் கேமரா லென்ஸ் வரை போட்டோகிராஃபி துறையின் அனைத்து அப்டேட்களையும் விரல்நுனியில் வைத்திருப்பவர்!