ஆலோசனைகளைப் பெற

திருமணமாகி இயற்கை கருத்தரித்தலுக்கு எத்தனை ஆண்டுகள் காத்திருக்கலாம்?

திருமணமான தம்பதிகள் கருத்தடை சாதனம் மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதுவும் பயன்படுத்தாமல் பன்னிரண்டு மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, கருத்தரிக்கவில்லை எனில் மருத்துவமனைக்குச் செல்லலாம்.


குழந்தையின்மை பிரச்னைக்கு காரணம் பெண்ணா?

ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படக்கூடிய மருத்துவப் பிரச்னையாக குழந்தையின்மை இருக்கிறது. எனவே, குழந்தையின்மை பிரச்னைக்கு இரு பாலருக்கும் சரிசமமான பங்கு உண்டு.


குழந்தையின்மைக்கான அடிப்படைச் சோதனைகள் என்னென்ன?

* பெண்ணின் இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவை சரிபார்க்க ரத்தப் பரிசோதனை.
* ஆண்களின் விந்தணுக்களை ஆய்வு செய்யும் பரிசோதனை.
* பெண்ணின் கருப்பை & கரு முட்டைகளின் அளவை பரிசோதிக்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்.