Published: MAR 29, 2024
திடீர் உடல்நலக் குறைவு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் தரமான மருத்துவ சிகிச்சையைப் பெற எல்லோரிடமும் போதிய பண வசதி இருக்கிறதா?
எதிர்பாராத, அவசரக் கால மருத்துவச் செலவை எல்லோராலும் ஏற்க முடியுமா?
எந்த விதமான சிகிச்சை என்றாலும் அனைவராலும் அதற்கான செலவு செய்ய முடியுமா?
இந்தக் கேள்விகளுக்கு 'முடியாது' என்பதே விடையாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. அவசர மருத்துவ செலவு வரும்போது நம்முடைய சேமிப்பு மொத்தமாக அதற்கே சென்று விடுகிறது. கையில் பணம் இல்லாதபோது கடன் வாங்கி மருத்துவ செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதிலும் மருத்துவமனையில் திடீரென அதிக பணம் கட்ட சொன்னால், கடன் வாங்கி செலவு செய்வது கூட அந்த நேரத்தில் முடியாமல் போகும் சூழல் சிலருக்கு உண்டாகிறது.
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திடீரென உடல்நிலை மோசமாகிறது. அவரைப் பரிசோதித்ததில் கர்ப்பப்பையில் புற்றுநோய் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மாத சம்பளத்தில் காலத்தை ஓட்டும் அவர்களுக்கு இது போன்ற மருத்துவச் செலவு என்பது அதிர்ச்சிகரமான விஷயமாகும். வேறு வழியில்லாமல் மருத்துவம் பார்க்க நகைகளை அடகு வைத்து, சொத்துகளை விற்று லட்சக்கணக்கில் மருத்துவமனைக்கு பணம் கட்டி வைத்தியம் பார்ப்பார்கள். தான் நடத்தும் மருத்துவமனைகளில் இது போன்ற உண்மைக்கதைகளை நேரில் பார்க்கும் பாரிவேந்தர், முடிந்தவரை கஷ்டப்படும் மக்களுக்கு பல சலுகைகளை அளித்து வருகிறார்.
இது போன்றதொரு நிலையில், மக்கள் என்ன செய்வார்கள் என யோசித்த பாரிவேந்தர், பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட குளித்தலை, மண்ணச்சநல்லூர், துறையூர், லால்குடி, முசிறி, பெரம்பலூர் என 6 சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்ந்த 1,500 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் மருத்துவச் சிகிச்சை பார்ப்பதற்காக 150 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். ஏழைக் குடும்பங்களுக்கு எட்டாத உயர் மருத்துவ சிகிச்சையை தன்னுடைய தாராள மனதால் எளிமையாக மாற்றியுள்ளார் டாக்டர் பாரிவேந்தர்.
யார் இந்த பாரிவேந்தர்?
சாதாரண ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி பல கல்வி நிறுவனங்களை உருவாக்கி இன்று தமிழகத்தின் கல்வித் தந்தைகளில் ஒருவராக தன்னை உயர்த்திக் கொண்டவர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்திய ஜனநாயக கட்சியை நிறுவினார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் பாரிவேந்தர் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று, பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காகவும், உயரிய கொள்கைகள் கொண்டு மாணவ மாணவிகளுக்கு உலகத் தரமான உயர்கல்வியை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வியக்கத்தக்க செயல்களைச் செய்து வருகிறார்.
சொந்தப் பணத்தை தொகுதி மக்களுக்கு செலவிடுபவர்:
டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தனது சொந்த நிறுவனங்களின் மூலம், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்காக ஏராளமான பணிகளை மேற்கொண்டார். அதில் முக்கியமான திட்டங்களாகத் திகழ்பவை, இலவச உயர்கல்வித் திட்டத்தின் கீழ் அவர் ரூ.118 கோடியே 77 லட்சத்து 51 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பல்வேறு படிப்புகளில் 1,200 மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி செய்துள்ளார். இதனிடையே, கொரோனா பேரிடர் கால உதவிகளை ரூ.2 கோடியே 22 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் செய்துள்ளார். இதில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம், வெளியூர்களில் சிக்கியோர் மீட்பு போன்ற பணிகள் அடங்கும்.
மேலும், பள்ளி மற்றும் ஊர் நலனுக்காக ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பில் கணினி, போர்வெல் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு பணிகளை நிறைவேற்றி உள்ளார். ஆன்மிகம் மற்றும் அறப்பணிகளுக்காக ரூ.4 கோடியே 80 லட்சத்து 80 ஆயிரம் செலவு செய்துள்ளார். மொத்தம் ரூ.126 கோடியே 90 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் ஏராளமான திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யின் இத்தகைய பணிகளுக்கு தொகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பெரம்பலூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பாக டாக்டர் பாரிவேந்தர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் செய்த மக்கள் பணிகளைப் பாராட்டி இந்த முறையும் மக்கள் அவருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். மீண்டும் பெரம்பலூர் தொகுதி எம்.பி ஆவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.