Published: MAR 29, 2024
நீட் என்ற மந்திர வார்த்தையைக் கூறி தமிழக மக்களை திமுகவினர் ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டு இருப்பதாக பெரம்பலூர் தொகுதி IJK வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் விமர்சித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில், சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தொகுதியில் பார்க்கவ குல சமுதாயம் ஒன்றரை லட்சம் வாக்குகள் கொண்டது என குறிப்பிட்டார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். திமுக ஒரு அடிமை கூடாரம் என்றும், அதில் 15 ஆண்டு காலமாக திருமாவளவன் ஏன் தொற்றிக் கொண்டு உள்ளார் என்றும் பாரிவேந்தர் கேள்வி எழுப்பினார். நீட் என்ற மந்திர வார்த்தையை கூறி தமிழக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டு இருப்பதாக பாரிவேந்தர் விமர்சித்தார்.