“மோடியை தமிழகத்திற்கு முதன்முதலில் அழைத்து வந்து அறிமுகப்படுத்தியவர் பாரிவேந்தர்”,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம்!
சிறு சிறு தொழில்களும் விவசாயமும் நிறைந்த பூமி பெரம்பலூர். நெல், கரும்பு, வாழை, வெங்காயம், தக்காளி எனப் பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, முசிறிப் பகுதியில் வாழை, பாய் முடையும் கோரை உற்பத்தி பிரசித்திபெற்றது. அதேபோல, மண்ணச்சநல்லூர் தொகுதியில் அரிசி ஆலைகள் நிறைந்திருப்பதால், தமிழ்நாடு முழுவதும் இங்கிருந்து அரிசி செல்கிறது. ஆனாலும், தொகுதியிலுள்ள 70 சதவிகித மக்கள் வறுமை நிலையிலேயே இருக்கிறார்கள். தொழிற்சாலைகள் பெரிதாக இல்லாததால், இந்தத் தொகுதியிலுள்ள இளைஞர்கள் வேலைக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டிய சூழலே நிலவுகிறது. மொத்த வாக்காளர்கள் 14,39,315; பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, குளித்தலை ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி. 1951-ம் ஆண்டு முதல் தேர்தலைச் சந்தித்துவரும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில், 17-வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான் பாரிவேந்தர்.