ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். அது மற்றவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த நிமிடம் நீங்கள் சூப்பர் ஸ்டார்.

உங்கள் படைப்புகளைச் சமர்பிக்க

Note: File Size less than 20/200 MB for Image/Video

FAQ

1 எதையெதை அனுப்பலாம்?

நீங்கள் பார்த்த, ஊர்ஜிதமாக அறிந்த தகவல்களில் செய்திக்கான சுவாரஸ்யம் இருந்தால் அனுப்பலாம். வதந்திகள், ஊர்ஜிதமில்லா ஃபார்வர்ட்கள் கண்டிப்பாக வேண்டாம். விநோதமான சம்பவங்கள் அல்லது கண்முன் நிகழும் வித்தியாசமான நிகழ்வுகளை மொபைலில் வீடியோ எடுத்து அனுப்பலாம். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், ஃபோட்டூன்கள், சினிமா விமர்சனங்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், மினிமலிஸ படைப்புகள், பயண சுவாரஸ்யங்கள், துறைசார் பதிவுகள், உலக, இந்திய மற்றும் தமிழ் சினிமா பார்வைகள், சமையல் குறிப்புகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள், இன்னும் இன்னும்!

2 யார் பெயரில் வெளிவரும்?

உங்கள் பெயரில் வெளிவரும்! புனைப்பெயரிலும் வெளியிடலாம். ஆனால், அந்தப் பெயர் விகடன் டேட்டா பேஸில் வேறு யாரும் முன்னரே பதிவு செய்யாததாக இருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படைப்புகள் அனுப்பும் பட்சத்தில், உங்களுக்கான தனிப்பக்கம் தொடங்கப்பட்டு, அதில் நீங்கள் தரும், உங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறும். மின்னஞ்சல் முகவரி வெளியிட விரும்பினால் அதுவும் வாசகர்களின் பார்வைக்கு இருக்கும். இவையெல்லாம், நீங்கள் அனுப்பும் படைப்புகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே அமையும்.

* தற்போது பரிசோதனை முயற்சியில் இருப்பதால், பங்களிப்பவரின் பெயரில் படைப்புகள் வெளியாகும். உங்கள் ஆர்வத்தையும் தொடர் பங்களிப்பையும் பொறுத்து மிகவிரைவில் உங்களுக்கென தனிப்பக்கம் உருவாக்கப்படும்.

3 என்னைப் பற்றிய விபரங்கள் அனுப்ப வேண்டுமா?

ஆம். பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட உங்கள் விபரங்கள்.

4 என் படைப்பு திருத்தப்படுமா?

உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. இவை எதுவும் படைப்பின் தரத்தை மேம்படுத்தவே மேற்கொள்ளப்படும். தேவைப்படும் சமயங்களில், உங்களுக்கு அது தொடர்பான தகவல்கள் பகிரப்படும்!

5 வேறு தளத்தில் வெளியிட்டவற்றை அனுப்பலாமா?

வேண்டாம்! உங்கள் கற்பனை என்றால், விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்புபவை மட்டுமே பரிசீலிக்கப்படும். நிகழும் சம்பவம் பற்றிய பதிவென்றால், முதலில் எது சமர்பிக்கப்படுகிறதோ, அது பரிசீலிக்கப்படும்!

6 வெளியான என் படைப்புகளை, வேறு சமூக வலைதளங்களில் வெளியிடலாமா?

My Vikatan-க்கு என்று நீங்கள் எழுதியதை, குறிப்பிட்டு ஷேர் செய்து கொள்ளலாம். அச்சு அசலாக அப்படியே பிரதியெடுத்து வேறு தளங்களில் வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

7 தமிழில் மட்டும்தான் எழுத வேண்டுமா?

அப்படி எந்தக் கட்டுப்பாடுமில்லை. ஆங்கிலத்தில்கூட இருக்கலாம். மொழியே தேவையில்லாமல், ஒரு சின்ன கார்ட்டூனில், மைம் வீடியோவில், ஃபோட்டோவில் எல்லையற்று உங்கள் சிறகை விரிக்கலாம்.

8 படைப்புச் சுதந்திரத்தின் எல்லை என்ன?

கற்பனைச் சிறகு விரிந்தால், வானம்கூட எல்லை இல்லைதான். உங்கள் படைப்பு ஒரு நல்ல விவாதத்துக்கு வழிவகுக்கலாம். ‘அட.. இப்படி ஒரு பார்வை இருக்கா?!’ என்று விழி விரிய வைக்கலாம். ஆனால், அது யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்!

9 என்னவெல்லாம் செய்யக் கூடாது?

வெற்று கவன ஈர்ப்புக்காக, யாரையேனும் புண்படுத்தக்கூடிய, சிலரது உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடிய எதுவும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

நன்றி..!