வேழம் காப்போம்

யானைகளின் காடுகள், வீடுகளாகவும் தண்டவாளங்களாகவும் விவசாய நிலங்களாகவும் மாறிவிட்டன. யானை வழித்தடங்களும் அழியத்தொடங்கிவிட்டன. இதனால் உருவான உணவுப்பஞ்சமும் தண்ணீர் பற்றாக்குறையும் யானைகளை வனத்தை விட்டு விரட்டுகின்றன. யானை-மனிதர் மோதலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. என்ன செய்தால் தீரும் இந்தப் பிரச்னைகள்? எப்படிக் காப்பது நம் யானைகளை? இங்கு உரையாடுவோம். #வேழம்காப்போம்!