இது நீங்களும், விகடனும் இணைந்து செயல்படுவதற்கான களம். இதுநாள்வரை உங்களுக்கான கட்டுரைகளை, படைப்புகளை நாங்கள் தயாரித்தோம். இனி, நீங்களே உங்களுக்குத் தேவையான கட்டுரைகளுக்கு விதையிடப்போகிறீர்கள். உங்கள் அன்றாடத் தேவைகளில் இருந்து கண்முன்னே காணும் சமூக அவலங்கள்வரை எத்தனையோ விஷயங்கள் குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் உங்களிடம் இருக்கும். அந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய நிபுணர்களிடமிருந்து நேரடியாகப் பதில்பெற்று உங்களுக்கு வழங்கும் முயற்சிதான் இந்த #DoubtOfCommonMan. ‘சம்மன் இல்லாமல் காவல்துறை கைது செய்ய முடியுமா?’ என்பதில் தொடங்கி, ‘ரேஷன்கடையில் சோப்பையும் வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியுமா?’ என்பதுவரை எதுகுறித்து வேண்டுமானாலும் நீங்கள் கேள்விகளை அனுப்பலாம். உங்கள் கேள்விகளுக்கான விடைகளை கட்டுரைகளாக, காணொளிகளாக, ஃபேஸ்புக் நேரலையாக விகடனின் பல்வேறு தளங்கள் வழியாக உங்களிடம் கொண்டுவந்து சேர்ப்போம். கீழுள்ள பெட்டியில், எந்தத்துறை சார்ந்து கேள்வி எழுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வு செய்யுங்கள். கேள்விகளைக் கொட்டுங்கள். உங்களின் கேள்விகளுக்குப் பதில்தேடித்தர எங்கள் நிருபர் படை காத்திருக்கிறது!
புதிய தலைப்புகள், அறிவிப்புகள், பதில்கள் என நமக்கிடையேயான அத்தனை உரையாடல்களும் விகடன் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும். விகடனின் சமூக வலைதளங்களை பின்தொடர்வதன் மூலம் எந்த அப்டேட்டையும் தவறவிடாமல் இருக்கலாம்.
உதாரணத்திற்கு சில கேள்விகள்
சமூகம்: "ஊட்டியில் தமிழக அரசு ஓர் அணை கட்டிவிட்டால் கர்நாடாகாவிற்கு செல்லும் தண்ணீரை தடுத்துவிடலாம் அல்லவா? மேலும், தமிழகத்திற்கும் நிறைய தண்ணீர் கிடைக்கும். இதை ஏன் தமிழக அரசு செய்யமறுக்கிறது?"
பதிலைப் படிக்க
சட்டம்/காவல்துறை: "புகைப்படங்கள், வீடியோக்கள் போல ஸ்க்ரீன்ஷாட்களை நீதிமன்றத்தில் சாட்சிகளாக சமர்ப்பிக்கலாமா? சட்டம் அதை ஏற்றுக்கொள்கிறதா? விளக்கம் தேவை"
பதிலைப் படிக்க
தனி மனிதன்: "யெஸ்டி பைக் வச்சிருக்கேன். சென்னைல யாராச்சும் சூப்பர் ஜாவா மெக்கானிக் இருக்காங்களா?"
பதிலைப் படிக்க
அரசு நிர்வாகம்: "காவல் துறையின் அவசர உதவியைப் பெறுவதற்கு ஆப் ஒன்று இருக்கிறதாம்? அதை எப்படி பயன்படுத்துவது?"
பதிலைப் படிக்க
தொழில்நுட்பம்: "என்னோட ரெட்மி மொபைல்ல எப்ப பார்த்தாலும், எங்க பார்த்தாலும் விளம்பரங்கள் வந்துட்டே இருக்கு; பார்க்கவே எரிச்சலா இருக்கு. இதைத் தடுக்கவே முடியாதா?"
பதிலைப் படிக்க
விவசாயம்: "வீட்டு மொட்டை மாடியில் சின்னதா ஒரு மாடித்தோட்டம் போடலாம்னு இருக்கேன். எங்கிருந்து தொடங்குறதுன்னு ஒரு டவுட்? முதல்ல நான் என்ன செய்யணும்னு சொல்லுங்களேன்?"
பதிலைப் படிக்க
மருத்துவம்: "தினமும் டீக்கடையில் நான் சமோசா சாப்பிடுவேன். இதனால் உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?"
பதிலைப் படிக்க
சுற்றுச்சூழல்: "சூழலியல் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள்ன்னு எல்லோருமே மக்களை மரம் வளர்க்க சொல்றாங்க. நிஜமாவே இதனால மழை வருமா? இதுவரைக்கும் நாம நட்ட லட்சக்கணக்கான மரங்களெல்லாம் என்னாச்சு?"
பதிலைப் படிக்க
நிதி: "நண்பர்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்ட்கள்ல முதலீடு செஞ்சிருக்காங்க. நானும் தொடங்கலாம்னு இருக்கேன். இதற்கு நான் என்ன செய்யணும்? இந்த மியூசிச்சுவல் ஃபண்ட்னா என்ன?"
பதிலைப் படிக்க