• Title sponsor


அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் விதிமுறைகள்:
  • வயது வரம்பு இல்லை. 'அனைத்து பாலினரும்' கலந்து கொள்ளலாம்.
சமையல் விதிமுறைகள்:
  • 2 கோர்ஸ் மெனுவை வீட்டிலிருந்து தயார்செய்து, போட்டி நடைபெறும் இடத்துக்கு கொண்டு வர வேண்டும்:
  • * 1 மெயின் டிஷ் (Main Dish)
  • * 1 சைட் டிஷ் (Side Dish)

    (இதற்கு மேற்பட்ட உணவுகளை சமைத்து வர அனுமதி இல்லை)

    - ஆரோக்கியமான சமையல், பாரம்பரிய சமையல், குடும்பத்தில் வழி வழியாக தொடர்ந்து வரும் பரம்பரை சமையல், வட்டார சிறப்பு சமையல்...
    இந்த நான்கு அம்சங்களில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ அடிப்படையாகக் கொண்டு உணவைத் தயார் செய்யலாம்.
    - சைவம் மற்றும் அசைவம் இரண்டும் இடம் பெறலாம்.
4 அளவீடுகளின் அடிப்படையில் உணவு மதிப்பிடப்படும்:
  • * மெனு வடிவமைக்கப்படும் விதம் (Curation of menu)
  • * செய்முறை (Recipe)
  • * காட்சிப்படுத்தும் விதம் (Presentation)
  • * உணவின் சுவை மற்றும் பதம் (Taste & Texture)
உணவைக் காட்சிப்படுத்துவதற்கான விதிமுறைகள்
  • - தயார் செய்து எடுத்து வந்த உணவைக் காட்சிப்படுத்த 20 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • - காட்சிப்படுத்துவதற்கு 3 - 4 அடி இடம் வழங்கப்படும்.
  • - காட்சிப்படுத்த தேவையான தட்டுகள், கிண்ணங்கள் போன்றவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே எடுத்து வர வேண்டும்.
  • - ஒவ்வொரு உணவுக்கும் தேவையான பொருட்கள் (Ingredients), அதன் அளவு மற்றும் செய்முறை ஆகியவற்றை எழுதி உணவுடன் காட்சிப்படுத்த வேண்டும். (இதனை வீட்டில் இருந்தே எழுதி எடுத்து வரவும்).
முக்கிய விதிமுறைகள்
  • - போட்டி நடைபெறும் தினம், காலை 8.30 முதல் காலை 10 மணி வரை நேரடியாகவும் முன்பதிவு நடைபெறும். (இருப்பினும் போட்டியில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கும், முதலில் வருவோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.)
  • - முன்பதிவின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் காட்சிப்படுத்தும் நேரம் மாறுபடலாம் அல்லது தாமதம் ஏற்படலாம் என்பதால், அதற்கேற்றாற் போல் உணவைத் தயார் செய்து கொண்டு வரவும்.
  • - போட்டிக்கு எடுத்து வரும் உணவு எதிர்பாராத விதமாக சேதமடைந்தாலோ, சுவை மாறினாலோ, கெட்டுப் போனாலோ அதற்கு விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது.
  • - நடுவரின் தீர்ப்பே இறுதியானது. போட்டியின் விதிமுறைகளைக் கடைபிடிக்காத போட்டியாளர்களை நீக்குவதற்கு நடுவருக்கு முழு உரிமை உண்டு.
  • - போட்டியாளர்களுடன் ஒருவரை மட்டுமே அழைத்து வர அனுமதி உண்டு.
  • - போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 044- 66802980/07 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். (காலை 10 மணி முதல் 6 மணி வரை, விடுமுறை நாட்கள் தவிர)
போட்டி சுற்றுகள்
  • - முதல் சுற்றில் தேர்வாகும் 10 நபர்கள் மட்டும், அன்றே நடைபெறும் 'நேரடி சமையல்' போட்டியில் கலந்து கொள்வார்கள்.
  • - நேரடி சமையல் போட்டியில் என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதை போட்டி ஆரம்பிக்கும் போது நடுவர் தெரிவிப்பார்.
  • - சமைப்பதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் மற்றும் அடுப்பு என அனைத்தையும் நாங்களே வழங்குவோம். போட்டியாளர்கள் இந்த சுற்றில் ஒரு உதவியாளரை உடன் வைத்துக்கொள்ளலாம்.
  • - சமைப்பதற்கு 40 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • - நேரடி சமையல் போட்டியின் மூலம் 3 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அவர்கள், சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள்.
  • - இறுதிப் போட்டி குறித்த விவரங்கள் போட்டியாளர்களுக்கு பின்னர் முறையாக அறிவிக்கப்படும்.
  • - இறுதிப் போட்டியில் முதல் 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களில் முதலிடத்தைப் பிடிக்கும் வெற்றியாளருக்கு 'சமையல் சூப்பர் ஸ்டார்' பட்டமும் ஆச்சர்யப் பரிசுகளும் காத்திருக்கின்றன.
  • - இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் நபர்களுக்கும் நிச்சயப் பரிசு காத்திருக்கிறது.
  • - வெற்றியாளர்களுக்கு மொத்தம் ரூ. 1 லட்சம் வரையிலான பரிசுப் பொருள்கள் காத்திருக்கின்றன!*
  • - கடந்த வருட போட்டியின் வெற்றியாளர்கள் இம்முறை போட்டியில் பங்கேற்க முடியாது.
  • *மாறுதல்களுக்கு உட்பட்டது.
நடுவர்: செஃப் தீனா
  • ஜெயா டிவி 'அடுப்பங்கரை' நிகழ்ச்சி மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் செஃப் தீனா. இதற்கு முன்பு ஜீ தமிழ் சேனலில் 'அஞ்சறைப்பெட்டி' என்ற கிச்சன் ஷோ மூலமும் இவரை பலரும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. ஹோட்டலில் டிரெயினியாகத் தன்னுடைய பணியைத் தொடங்கி தற்போது எக்சிக்யூட்டிவ் செஃப் எனத் தன்னுடைய துறையில் உயர்ந்திருக்கிறார். சமையல் துறையில் 15 வருட அனுபவமுள்ள இவர், 'மேரியட்' உட்பட இந்தியாவின் பல முன்னணி ஸ்டார் ஸ்டார் ஹோட்டல்களில் பணியாற்றியிருக்கிறார்.
  • தனது ‘செஃப் தீனாஸ் கிச்சன்’ யூடியூப் சேனல் மூலம் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தன் சொந்தங்களாக மாற்றி இருக்கிறார். ஸ்டார் ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவுகளை வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு, எவ்வாறு எளிமையாக சமைக்கலாம் என்பதை மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அதுமட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு சமையற்கலை வல்லுனர்களை சந்தித்து தமிழின் பாரம்பரிய உணவுகள், ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகள், இந்திய குழம்பு வகைகள், பேக்கிங் என பல வகையான உணவுகளைக் கேட்டும் கற்றும் அவரது யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறார்.

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டாரில் பதிவு செய்தமைக்கு நன்றி.
Go To Vikatan