உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே
கொரோனாவால் பல உலக நாடுகள் ஸ்தம்பித்திருக்கும் நிலையில், உலகம் எங்கும் வாழும் நம் தமிழ்க் குடும்பங்களின் சுட்டிகளும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு நீண்ட விடுமுறைதான் என்றாலும், மற்ற விடுமுறை நாள்களில் இருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இதில் நிச்சயம் இல்லை. வீட்டிற்குள்ளேயே தங்களால் இயன்றதைச் செய்து வருகிறார்கள். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அவர்களுக்கு இருக்கும் தனித்திறமைகளை நீங்கள் வெளியே கொண்டு வரலாமே? சுட்டீஸே சொல்லும் பொம்மைகளின் சுவாரஸ்யக் கதைகள், அவர்கள் செய்யும் அசத்தல் கிராஃப்ட், கதைகளை நடித்துக் காட்டும் வீடியோக்கள், அவர்கள் மிகவும் மிஸ் செய்யும் விஷயங்கள் பற்றிய வீடியோக்கள், ஓவியங்கள் என அனைத்தையும் அனுப்பலாம்
வீட்டில் வாங்கி வைத்திருக்கும் அத்தனை பொம்மைகளுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யக் கதை இருக்குமில்லையா? அந்தக் கதைகளை கிரியேட்டிவாக இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
பேப்பர், பழைய சிடி என நாம் தூக்கியெறியும் எந்தப் பொருளைக் கொடுத்தாலும், அதை வைத்து ஒரு செம ஸ்மார்ட் கிராஃப்ட்டை உருவாக்குபவரா உங்கள் சுட்டி..? அந்த கிராஃப்ட்களுக்கான ஐடியாவை இங்கே பகிரலாமே..!
சுட்டி விகடன்ல வெளிவந்திருக்கிற எந்தக் கதையை வேணாலும் எடுத்துக்கலாம். அதை அப்படியே உங்க சுட்டீஸ் நடிச்சுக் காட்டணும். இதான் டாஸ்க். தனியாவோ, கூட்டாவோ... எதுன்னாலும் எங்களுக்கு ஓகே..!
இந்த க்வாரன்டீன் காலத்துல குட்டீஸ், அவங்க பள்ளித் தோழர்கள், பிடித்த ஆசிரியர், பிடித்த கடை, ப்ளே கிரவுண்ட்ன்னு நிறைய விஷயங்களை மிஸ் பண்ணுவாங்க இல்லையா? அப்படி மிஸ் பண்ணும் விஷயங்களை அழகாக இங்க பதிவு செய்ய சொல்றீங்களா?
இதான், அதான்னு இல்ல... எதை வேணாலும் வரையலாம். ஆனா, புதுசா, ஃப்ரெஷ்ஷா நச்சுனு கிரியேட்டிவ்வா இருக்கணும். கேம் ஸ்டார்ட்ஸ்... அனுப்புங்க!